(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இத்தாலியின் லம்பேடுசா தீவு கடற்பரப்பில் குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 41 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், இந்த விபத்தில் உயிருடன் பலர் மீட்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
துனிசியாவில் உள்ள ஸ்ஃபாக்ஸில் இருந்து புறப்பட்ட படகு இத்தாலிக்கு செல்லும் வழியில் விபத்துக்குள்ளாகி மூழ்கியதாக உயிர் பிழைத்தவர்கள் மீட்பு பணியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
வட ஆபிரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு கடல் வழியாக கடக்கும் போது இந்த ஆண்டு இதுவரை 1,800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும், சமீபத்திய நாட்களில், இத்தாலிய ரோந்து படகுகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் குழு லம்பேடுசாவில் வந்த மேலும் 2,000 பேரை பாதுகாப்பாக மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.