(R.M Sajjath)
நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு தொடர்ந்தும் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தமிழ் FM செய்திப் பிரிவிடம் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
WEATHER VOICE CUT
இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் தற்போது இடைக்கிடையே மழை பெய்தாலும் தமது திணைக்களத்தின் கீழுள்ள நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு இன்னும் அதிகரிக்கவில்லை என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
73 நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவானது 8 இலட்சம் ஏக்கர் அடியாக காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் சுதர்ஷனி விதானபத்திரண தெரிவித்துள்ளார்.
இது நீர்த்தேக்கங்களில் இருக்கவேண்டிய நீர் கொள்ளளவில் 27 வீதம் என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, அனர்த்த முகாமைத்து நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, இதுவரை 19 மாவட்டங்களில் 89 ஆயிரத்து 85 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 6 ஆயிரத்து 934 பேர் கடும் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், வட மாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
அதேநேரம், நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலையால் 54 ஆயிரத்து 810 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதுடன், குருநாகல் மாவட்டத்திலேயே அதிக சேதம் பதிவாகியுள்ளதாக விவசாய காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, குருநாகல் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 923 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாய காப்புறுதி சபை சுட்டிக்காட்டியுள்ளது.