கொழும்பு மாவட்டத்தில் சில பகுதிகளில் திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அதன்படி கொழும்பின் 11,12,13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
நாளை சனிக்கிழமை (23) மாலை 6 மணி முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (24) காலை 6 மணி வரையான 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.