(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன மற்றும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள புகையிரத தொழிற்சங்கங்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் மற்றும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ஏனைய புகையிரத தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் உப கட்டுப்பாட்டாளர்களுடன் இந்த கலந்துரையாடல் இன்று காலை புகையிரத தலைமையகத்தில் இடம்பெற்றது.
இந்த தீர்மானத்தின் மூலம் வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி, இன்று பிற்பகல் வழமையாக புகையிரதங்களை இயக்குவதற்கு புகையிரத திணைக்களம் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து, தொழிற்சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்த தீர்மானித்தது, அதன்படி சுகயீன விடுப்பு அறிக்கை செய்த உப கட்டுப்பாட்டாளர்கள் பணிக்குத் திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது.







