2030 ஆம் ஆண்டுக்கான பீபா கால்பந்து உலகக் கிண்ண தொடரை மொராக்கோ, போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் நடத்தும் என சர்வதேச கால்பந்து அமைப்பான பீபா அறிவித்துள்ளது.
போட்டியின் 100 ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அர்ஜென்டினா, பராகுவே மற்றும் உருகுவே ஆகிய நாடுகளில் முதல் மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன.
நேற்று அறிவிக்கப்பட்ட முடிவின் பிரகாரம் உலகக் கிண்ண கால்பந்து தொடர் மூன்று கண்டங்களில் உள்ள ஆறு வெவ்வேறு நாடுகளில் நடைபெறவுள்ளது.
இதற்கிடையில், சவுதி அரேபியா 2034 ஆம் ஆண்டுக்கான பீபா உலகக் கிண்ண கால்பந்து தொடரை நடத்துவதற்கான தனது விருப்பத்தை அறிவித்துள்ளது என அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.