நாட்டில் மீண்டும் எரிபொருள் கோட்டா முறை (QR) நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
உத்தர லங்கா கூட்டமைப்பினரின் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வாசுதேவ நாணயக்கார இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தற்போதைய உலகளாவிய எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையில் எரிபொருளின் விலை உயரும். அதேவேளை பொருட்களின் விலையும் பாரிய அளவில் உயரும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எரிபொருள் விலையை அதிகரிக்காமல் இருப்பதே இதற்கு ஒரே பதில் எனவும் மீண்டும் எரிபொருள் கோட்டா முறைக்கு செல்ல வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.