நாட்டில் மேலும் ஆறு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் கொழும்பு காசல் மகளிர் வைத்தியசாலையில் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகம பிரதேசத்தை சேர்ந்த தாய் ஒருவருக்கு 6 ஆண் பிள்ளைகள் பிறந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதனை வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அஜித் தந்தநாராயண தெரிவித்துள்ளார்.
ஆறு குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடைசியாக 2021ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் திகதி ஆறு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
அன்று மூன்று ஆண் குழந்தைகளும் மூன்று பெண் குழந்தைகளும் பிறந்தமையும் குறிப்பிடத்தக்கது.