இன்று இரண்டு இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.
நாணய வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் களம் இறங்கினர்.
இதில் வார்னர் 29 ரன், மார்ஷ் 20 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய ஷாய் ஹோப் 33 ரன், பண்ட் 18 ரன், ரிக்கி புய் 3 ரன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 5 ரன், அக்சர் 21 ரன், சுமித் குமார் 2 ரன் எடுத்து அவுட் ஆகினர்.
இதையடுத்து ரிக்கி புய்க்கு பதிலாக இம்பேக் பிளேயராக களம் இறங்கிய அபிஷேக் போரெல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ஹோப் 33 ரன், அபிஷேக் போரெல் 32 ரன், எடுத்தனர். பஞ்சாப் தரப்பில் ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.
பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய தவான் 22 ரன்னிலும், பேர்ஸ்டோ 9 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய ப்ரம்சிம்ரன் சிங் 26 ரன், ஜித்தேஷ் சர்மா 9 ரன் எடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து சாம் கர்ரன் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.
இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் கர்ரன் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 63 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இறுதியில் பஞ்சாப் அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 177 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.