NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பள்ளி மாணவன் பலி.

பன்சியகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.மூன்று பேர் பயணித்த மோட்டார் சைக்கிள் தன் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்தில் ஓட்டுனரும் பின்னால் பயணித்தவரும் படுகாயமடைந்துள்ளதுடன், பொல்பித்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் ஓட்டுனரான மாணவர் உயிரிழந்துள்ளார்.கலடன்வெவ பிரதேசத்தில் வசிக்கும் 16 வயது நிரம்பிய மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.காயமடைந்த மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Share:

Related Articles