மது போதையில் தனியார் பேரூந்தை செலுத்திய சாரதி ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.வவுனியா, ஏ9 வீதியிலே விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.வவுனியா தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து பொலிசார் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்த போது ஏ9 வீதியில் பயணித்த தனியார் பேரூந்து ஒன்றின் சாரதி மது போதையில் பேரூந்தை செலுத்தியமை கண்டு பிடிக்கப்பட்டது.இதனையடுத்து பேரூந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பேரூந்தும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளின் பின் சாரதியை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்