இலங்கையில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானியம் மூடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதிவழி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் இலங்கையில் உள்ள ரோஹிங்கியா அகதிகளினால் இன்று (02) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணைய காரியாலயத்தின் முன்பாக பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணைய காரியாலயத்தை மூடுவதால், ரோஹிங்கியா அகதிகள் வேறொரு நாட்டிற்கு நிரந்தரமாக மீள்குடியேற்றம் செய்யப்படுவதோடு, உணவு, வீடுகள் போன்றவற்றுக்கான மாதாந்த கொடுப்பனவுகள் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.







