NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அக்கரப்பத்தனை தொடர் குடியிருப்பில் தீப்பரவல்!

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிலாஸ்கோ தோட்டப்பிரிவான நெதஸ்டல் தோட்டத்தில் இன்று (20) அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் 20 வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பு தொகுதியில் வீடு ஒன்று முற்றாக தீக்கிரையானதுடன் பாதிக்கப்பட்ட இந்த வீட்டில் வசித்து வந்த கர்ப்பிணி தாய் உட்பட ஐவர் நிர்கதிக்கு ஆளாகியுள்ளனர்.

அதேநேரம் இந்த தீ பரவல் சம்பவத்தை அறிந்த அயலவர்கள், தோட்ட பொதுமக்கள் ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் அதிரடி நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளதால் பாரிய பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டு நிர்கதிக்கு ஆளாகியுள்ள ஐவர் கொண்ட குடும்பத்தினரை தோட்டத்தில் தற்காலிகமாக உறவினர் வீடு ஒன்றில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 அத்துடன் இந்த தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் இது தொடர்பான விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles