NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அங்கீகரிக்கபடாத நாடுகளின் CONIFA மகளிர் உலகக்கிண்ணப்போட்டி.

கொனீபாவின் இரண்டாவது மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இம்முறை ஆர்க்டிக் வட்டத்திலுள்ள வடக்கு நோர்வேயில் நடைபெறவுள்ளது.ஐரோப்பிய கலாச்சார தலைநகர் Bodoவில் அங்கீகரிக்கபடாத நாடுகளின் CONIFA மகளிர் உலகக்கிண்ணப்போட்டியில் முதல் முறையாக தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி பங்கேற்கின்றது.பெண்களால் என்ன முடியும் என பெண்கள் அறியாததன் விளைவே பெண்களின் உச்சத் திறன்கள் குடத்திலிட்ட விளக்காக மறைந்து போகின்றன.தமிழீழப் பெண் போராளிகளின் வியக்கத்தக்க சாதனைகளை தமிழீழ மண் கண்டுள்ளது.

அந்த விழுமியங்களைக் காவியபடி உலகத் தமிழீழ பெண்கள் சாதனைகள் வரலாறு படைக்க வேண்டும்.அந்தவகையில் தமிழீழ உதைபந்தாட்ட அணியில் களமாடிக் கொண்டிருக்கின்ற அனைத்து வீராங்கனைகளிற்கும் முயற்சியின் உச்சம் தொடர நல்வாழ்த்துகள்.

Share:

Related Articles