NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அஞ்சல் மூல வாக்களிப்பின் அடையாளச் சான்று தொடர்பில் வெளியான அறிவிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பின் போது, ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம், செல்லுபடியாகும் கடவுச்சீட்டு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை என்பன அஞ்சல் மூல வாக்களிப்பின் அடையாளச் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது. 

தேர்தல்கள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது. 

இதேவேளை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share:

Related Articles