NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அடுத்த 2 வாரங்களில் பல பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும் என சுற்றாடல் அமைச்சர் தெரிவிப்பு… !

2023 ஆண்டு ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டின் 28 ஆவது கூட்டத்தில், பாதிக்கப்படக்கூடிய மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கான காலநிலை நியாய மன்றத்தை இலங்கை ஆரம்பிக்கத் தயாராகவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

காலநிலை நீதியை உறுதிப்படுத்துதல், இழப்புகள் மற்றும் சேதங்களுக்கு நிதியளிப்பதை துரிதப்படுத்துவதற்கு பாரம்பரியமற்ற மாற்று அணுகுமுறையை பேணும் பொதுவான நோக்கத்துடன், காலநிலை நியாய மன்றம் ஒன்றை நிறுவுவதற்கு இலங்கை முன்மொழிந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைகளுக்கு முன்னுரிமை அளித்து கலந்துரையாட அரசாங்கங்கள், அரசாங்கங்களுக்கிடையேயான நிறுவனங்கள் மற்றும் பிற தரப்பினர்களுக்கு தளத்தை வழங்கும் ஆசிய பசுபிக் அமைச்சர்கள் மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகளின் 5 ஆவது மன்றத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை கொழும்பில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் வேலைத்திட்டத்துடன் இணைந்து சுற்றாடல் அமைச்சு, இதனை ஏற்பாடு செய்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், தம்புள்ளை மற்றும் ஹிரிவடுன்ன ஆகியவற்றை சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலங்களாக அபிவிருத்தி செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் சுற்றாடல் அமைச்சர் கூறினார்.

இதேவேளை, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் சில பிளாஸ்டிக் பொருட்கள், அதாவது, பிளாஸ்டிக் மாலைகள், கரண்டிகள், முட்கரண்டிகள், தயிர் அல்லது ஐஸ்கிரீம் கரண்டிகள், ஸ்ட்ரோக்கள், மற்றும் பிளாஸ்டிக் இடியப்பத் தட்டுகள் ஆகியவை அடுத்த 2 வாரங்களுக்குள் தடை செய்யப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கழிவு முகாமைத்துவத்தின் கீழ் பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் மீள்சுழற்சிக்கும் புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்தாகவும், மத்திய சுற்றாடல் அதிகார சபை ஏற்கனவே விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு விதிகளை இதில் இணைத்துள்ளதாகவும் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் குறிப்பிட்டார்.

Share:

Related Articles