ஜனாதிபதி தேர்தல் இவ்வருட இறுதியில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பிரதான கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலுக்கான தமது வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி தொடர்பிலும் தற்போது அவதானம் செலுத்தி வருகின்றது.
குறிப்பாக பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி என்பன ஜனாதிபதி தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இவ்வாறானதொரு நிலையில், தம்மை சந்திக்க வருமாறு இந்திய அரசாங்கத்தினால் தேசிய மக்கள் சக்தியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்திய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அழைப்பையேற்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் இன்றையதினம்(05) இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, செயலாளர் வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய நிறைவேற்று பேரவை உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோரே இந்த விஜயத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.