அமெரிக்காவில் இன்று ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி, இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்கள்.
தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், இருவரும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் யார் எவ்வளவு முன்னிலையில் உள்ளனர் என்று அட்லஸ் இன்டெல் என்கிற நிறுவனம் வெளியிட்ட கருத்தக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் தனது போட்டியாளரும் அமெரிக்க துணை ஜனாதிபதியுமான கமலா ஹாரிஸை விட ஏழு மாநிலங்களில் முன்னிலை பெற்றுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாநிலங்களில் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார்.
இதற்கு முன்னதாக, அயோவா மாகாணத்தில் நடந்த கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அவருக்கு 47 சதவீத ஆதரவு கிடைத்ததாகவும், டிரம்புக்கு 44 சதவீத ஆதரவு கிடைத்ததாகவும், தெரிவிக்கப்பட்டது.
2016 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் அயோவா மாகாணத்தில் டிரம்ப் எளிதில் வெற்றி பெற்று இருந்தார்.
ஆனால், தற்போது அங்கு அவர் பின்தங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இரு வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவும் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.