அமெரிக்காவில் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெர்ஜீனியாவிலிருந்து நியூயோர்க் வரை பரவிய கடும் வெப்பத்தின் காரணமாக பால்டிமோர் மற்றும் பிலடெல்பியா மாகாணங்களில் நேற்று (23) 38 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சாதாரண அளவோடு ஒப்பிடும்போது சுமார் 15 டிகிரி அதிகரிப்பு காட்டப்பட்டுள்ளது.
அதிக வெப்பநிலை இன்று (24) நெப்ராஸ்கா மற்றும் கொன்சாஸை பாதிக்குமென தேசிய வானிலை மையம் எச்சரித்துள்ளது.