அமெரிக்காவில் உள்ள மோர்கன் பல்கலைக்கழக விடுதியில் மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணம் பால்டிமோர் நகரில் மோர்கன் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி படிக்கும் விடுதி மாணவர்களுக்கான உணவு பரிமாறும்போது இருதரப்பு மாணவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் வன்முறை அதிகரித்த நிலையில் மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 5 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.