அவுஸ்திரேலியா – பேர்த் நகரில் உள்ள இலங்கையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அந்நியர் ஒருவரால் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
28 வயதான இளைஞரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பேர்த்தில் உள்ள லாங்போர்டில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் மே 25 அன்று இரவு 10 மணியளவில் இவர் தாக்கப்பட்டார். 30 வயதான தாக்குதல்தாரி குறித்த இளைஞரின் முகத்தை குத்தி, தாக்கியதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்றைய தினம் ஏற்கனவே ஏனைய இருவர் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்த பொலிஸார், தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் சம்பவம் நடந்த ஒரு வாரத்திற்குப் பிறகும் பெர்த் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவித்துள்ளனர்.
அவரது அன்புக்குரியவர்கள் புழகுரனெஆந இல் அவரது சிகிச்சைக்காக பணம் திரட்டி வரும் நிலையில், . இதுவரை கூ9இ000 நிதி திரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.







