NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தியா செல்லும் அமெரிக்க ஜனாதிபதி !

ஜி20 அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்கப்பதற்காக அமெரிக்கா ஜனாதிபதி ஜோபைடன் இந்தியாவிற்கு பயணிக்கவுள்ளார்.

இந்திய தலைநகர் புதுடெல்லியில் எதிர்வரும் செப்டம்பர் 9 ஆம் மற்றும் 10 ஆம் திகதிகளில் ஜி20 நாடுகளின் மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எதிர்வரும் 7ஆம் திகதி இந்தியா பயணிக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சுல்லிவன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோபைடன் பதவியேற்ற பின்னர் முதன்; முறையாக இந்தியா பயணிக்கவுள்ளார்.

குறித்த உச்சி மாநாட்டில் உலகளாவிய பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கான கூட்டு முயற்சிகள் பற்றி விவாதிக்கவுள்ளதுடன், சுத்தமான எரிசக்தி மாற்றம் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது குறித்து விவாதிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles