(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இன்று சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினமாகும்.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 31ஆம் திகதி சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தின நினைவுக்கூரப்படுகிறது.
சர்வதேச ரீதியில் புகைத்தல் பாவனையினால் 8 மில்லியன் நபர்கள் மரணிக்கின்றனர் என உலக சுகாதார ஸ்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது. இவற்றுள் 09 இலட்சம் பேர் இரண்டாம் நிலை புகைத்தலினால் மரணிக்கின்றனர்.
உலகளாவிய ரீதியில் ஏற்படும் சுகாதார, பொருளாதார, சமூகப் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமையும் புகையிலை பாவனையை கட்டுப்படுத்துவதற்காக, உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கடந்த 2003ஆம்ஆண்டு புகையிலை தடுப்பு தொடர்பிலான சர்வதேச ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது. இதுவரையில் 168 நாடுகள் குறிப்பிட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. இலங்கையும் அந்த ஒப்பந்தத்தில்;; கைச்சாத்திட்டுள்ளது.
இளைஞர்கள் மற்றும் சிறுவர்களிடையே இன்றை காலக்கட்டத்தில் அதிகரித்திருக்கும் புகைத்தல் பாவனையில் இருந்து அவர்களை வெளியே கொண்டுவருவது அனைவரதும் பொறுப்பாகும். அத்தகைய விழிப்புணர்வுகள் ஒவ்வொரு குடும்பங்களில் இருந்தும் பாடசாலைகளிலும் இருந்து ஆரம்பிக்கப்படல் வேண்டும் என்பது கட்டாயமகும்.