NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு!

இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 1,005 ரூபாவால் குறைக்கப்படும் என லிட்ரோ லங்கா நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 12.5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் புதிய சில்லறை விலை 3,728 ரூபாவாகவும்,  5 கிலோ எரிவாயு சிலிண்டர் 402 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய சில்லறை விலை 1,502 ரூபாவாகவும், 2.3 கிலோ சிலிண்டரின் விலை 183 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய சில்லறை விலை 700 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அனைத்து விலை குறைப்புகளும் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எனவும் முதித பீரிஸ்; மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles