(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
வாய் புற்றுநோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய புற்று நோய் கட்டுப்பாட்டு வேலைத் திட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது..
இலங்கையில் நிகழும் மரணங்களுக்கான காரணிகளில் புற்றுநோய் இரண்டாவது இடத்தில் உள்ளது.
வாயில் புற்றுநோய்த்தாக்கத்தின் சிறு அறிகுறி இருந்தாலும், அது வாயின் எல்லாப் பகுதிகளையும் தாக்கி அழிக்கக’கூடியது.
வயது செல்ல செல்ல இந்த வாய் புற்றுநோயின் தாக்கம் அதிகரிக்கும். ஆகையால் புகைப்பிடிப்பது, புகையிலை மற்றும் வெற்றிலை பாவனைகளை முடிந்தளவில் தவிர்த்துக்கொள்வது என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.