இலங்கையின் இளைஞர்,யுவதிகள் மத்தியில் பழக்கத்திற்கு அடிமையாக்கும் புதிய இலத்திரனியல் சிகரட் பரவி வருவதாக தேசிய ஆபத்தான ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
குறித்த இலத்திரனியில் சிகரட்டில் போதையை ஏற்படுத்தும் நிக்கோடின் இருப்பதுடன் அது பழக்கத்திற்கு அடிமையாகும் எனவும் கட்டுப்பாட்டுச் சபை கூறியுள்ளது.
இவ்வாறான இலத்திரனியல் சிகரட்டுக்கள் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் தயாரிக்கப்படுகின்றன.
இதனடிப்படையில், இரசாயனங்கள் மற்றும் வாசனைகள் அடங்கிய இலத்திரனியல் சிகரட்டுக்கள சந்தையில் கொள்வனவு செய்ய முடியும்.
பழக்கத்திற்கு அடிமையாக்கும் இந்த இலத்திரனியல் சிகரட் பாவனையில் இருந்து பிள்ளைகளை பாதுகாக்கம் கடும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தேசிய ஆபத்தான ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.