NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு..!

இந்த ஆண்டுக்கான (2024) உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலக்கெடு நீடிக்கப்படாது என்பதால் அதற்கு முன்னதாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சை திணைக்களம் கோரியுள்ளது.

எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதி வரை இணையம் மூலமான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதுடன் அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மாணவர்கள் தங்கள் பாடசாலை அதிபர் மூலமாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் எனவும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

விண்ணப்பங்களை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்தும் கையடக்க செயலி ஊடாகவும் அனுப்பி வைக்க முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பான மேலதிக தகவல்களை திணைக்களத்தின் நேரடி தொலைபேசி இலக்கமான 1911 அல்லது பொது தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles