உலகளாவிய ரீதியில் முதல் முறையாக தகவல் தொழில்நுட்ப செயலிழந்துள்ளதாக பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
விமான நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட முக்கிய துறைகளை பாதிக்கும் வலுவான தொழில்நுட்ப செயலிழப்பு ஏற்பட்டுள்ளது.
அதற்கமைய, அவுஸ்திரேலியாவின் விமான சேவைகள் மற்றும் விமான நிலையங்களில் தொழில்நுட்ப சிக்கல்கள் பதிவாகியுள்ளதுடன். பல விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
தொழில்நுட்ப கோளாறுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையை மீட்டெடுப்பதில் சில சிரமங்கள் இருப்பதாக மைக்ரோசாப்ட் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலை முக்கியமாக பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து பதிவாகியுள்ளது. அத்துடன், இதன் காரணமாக லண்டன் பங்குச் சந்தையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இந்தியாவின் ரஜீவ் காந்தி சர்வதேச விமான நிலைய பயணிகளுக்கு அவர்களின் பயணத்தை எளிதாக்க கையால் எழுதப்பட்ட போர்டிங் பாஸ் வழங்கப்பட்டது.