எல்ல – கரடகொல்ல, மலித்தகொல்ல பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் வாழ்ந்த 10 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இன்று இடம்பெயர்ந்ததாக எல்ல பிரதேச செயலாளர் இந்திக்க கயான் பத்திரன தெரிவித்துள்ளார்.
இந்த இடத்தில் முன்பு பெரியளவில் கச்சா நீர் ஓடிக் கொண்டிருந்ததாகவும், அந்த இடத்தில் நிலமும் விரிசல் ஏற்பட்டு வெடித்துச் சிதறியதாகவும் அவர் கூறினார்.
இந்நாட்களில் மழை பெய்யாவிட்டாலும், வறண்ட காலநிலை நிலவி வருவதால் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அசுத்தமான நீர், ஓடையாக அந்த இடத்தில் ஓடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அக்குடும்பங்கள் தற்போது உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக எல்ல பிரதேச செயலாளர் இந்திக்க கயான் பத்திரன மேலும் தெரிவித்தார்.