NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரின் மகன்.!

நீண்ட காலமாக ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரின் மகனை 72 மணித்தியாலங்கள் தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை பெரிய நீலாவணை பகுதியில் நிலை கொண்டுள்ள விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலுக்கு அமைய கடந்த புதன்கிழமை (19) இரவு கல்முனை மத்ரஸா வீதிக்கு அண்மையில் வைத்து ஒருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் வசம் இருந்து 5 கிராம் 80 மில்லி கிராம் பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரின் தந்தை ஒய்வு பெற்ற முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நேற்றையதினம்(20) கல்முனை தலைமையக பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைத்தனர்.

ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபரை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து 72 மணித்தியாலங்கள் சந்தேக நபரை தடுத்துவைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

மேலும், குறித்த சந்தேக நபர் கடந்த காலங்களில் பல்வேறு போதைப்பொருளுடன் பல தடவை கைதாகி பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles