NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கஞ்சா பயன்படுத்த அனுமதிக்கும் தாய்லாந்து?

மருத்துவ காரணங்களுக்காக மாத்திரம் கஞ்சா பயன்படுத்த அனுமதிக்கும் சட்டமூலத்தை தாய்லாந்து அரசாங்கம் கொண்டு வரவுள்ளதுடன் அதனை இறுதி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

இந்த சட்டமூலத்திற்கு அமைய கஞ்சாவை புகைப்பதற்கு மருத்துவரின் ஆலோசனை குறிப்பு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ நோக்கத்திற்காக கஞ்சாவை எப்படி பயன்படுத்துவது என்பதை சட்டமூலம் தெளிவுப்படுத்தும் என அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எங்கு, எப்படி கஞ்சா விற்பனை, எங்கு கஞ்சா பயிர் செய்யப்படும் போன்ற விபரங்களுக்கு சட்டமூலத்தில் உள்ளடக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles