(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
கந்தானை – சர்ச் வீதியில் உள்ள இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் அருகில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
கந்தானை – சர்ச் வீதியில் உள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் இன்று (08) காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதனை தொடர்ந்து இரசாயன தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் பெற்றோர்கள் சிலர் தமது பிள்ளைகளை பாடசாலையில் இருந்து வெளியேற்ற முயன்று வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
பெற்றோர்கள் குழு ஒன்று பாடசாலை வளாகத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றபோது, பாடசாலை நிர்வாகத்திற்கும் பெற்றோர் குழுவிற்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்து குறித்த பெற்றோர் குழுவினரை பாடசாலைக்குள் செல்ல அனுமதித்துள்ளனர்.
எனினும், பதற்ற சூழல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.