NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கனடாவில் இரு முக்கிய மாகாணங்களுக்கு வெளியான எச்சரிக்கை.

கனடாவின் முக்கிய மாகாணங்களான ஒன்றாரியொ மற்றும் கியூபெக் ஆகியவற்றுக்கு கடுமையான வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒன்றாரியோ மாகாணத்தின் மத்திய மற்றும் தென் பகுதிகளிலும் கியூபக்கின் தென்பகுதிகளிலும் கரையோர பிராந்தியங்களிலும் வெப்பநிலை 30 முதல் 35 பாகை செல்சியஸ் அளவில் காணப்படும் எனவும் ஈரப்பதனின் தன்மையில் ஏற்படும் மாற்றம் காரணமாக 40 பாகை செல்சியஸ் அளவிலான வெப்பத்தை உணர நேரிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த வெப்ப நிலைமையானது, இன்றைய தினமும் நாளையும் நிலவும் என்றும் சுற்றாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Share:

Related Articles