சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் 1900 இலட்சம் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருள் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனை நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேரில் சென்று பார்வையிட்டள்ளார்.
பிரேசிலில் இருந்து விமான அஞ்சல் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த போதைப்பொருளை கரப்பந்தாட்ட வலையில் ஒளித்து கொண்டுவந்துள்ளதாகவும் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இந்த நடவடிக்கையை மிகுந்த அர்ப்பணிப்புடன் முன்னெடுத்த அனைத்து அதிகாரிகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.