NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காதலனுடன் போதைப்பொருள் விநியோகம் செய்த யுவதி கைது!

மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள் விநியோகம் செய்த விலத்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய யுவதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த யுவதி தனது காதலனுடன் மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள் விநியோகம் செய்து கொண்டிருந்த போது பொலிஸாரிடம் சிக்கியதாகவும் யுவதியின் காதலன் தப்பியோடியதாகவும், இருவரும் இணைந்து போதைப்பொருள் விநியோகத்தில் சில காலமாக ஈடுபட்டு வந்துள்ளதாகவும் மாதம்பை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி, உப பொலிஸ் பரிசோதகர் விலத்வெவ வீதியில் இளைஞன் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற சந்தேகத்திற்கிடமான யுவதியை கைது செய்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்ட போது சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞன் யுவதியை கைவிட்டு, பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

அந்த யுவதியிடமிருந்து பெருமளவு ஹெரோயின் மீட்கப்பக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மாதம்பை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்திய போது, தப்பிச் சென்றது தனது காதலன் எனவும், அவரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அவரின் தாயார் சில காலங்களுக்கு முன்னர் இவர்களை விட்டு பிரிந்து வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு தற்போது வேலைக்காக வெளியூர் சென்றுள்ளதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

 இந்த சம்பவம் தொடர்பாக மாதம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles