NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கார் சேசிங்கில் மாட்டிக்கொண்ட ஹேரி – மேகன் தம்பதியர்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பிரித்தானிய இளவரசர் ஹேரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், கார் சேசிங்கில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளவரசர் ஹேரி மற்றும் மேகன் தம்பதி நியூ யோர்க் நகரில் நடைபெற்ற அறக்கட்டளை ஒன்றின் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு சென்றிருற்த போது, நிகழ்ச்சி முடிந்து அங்கிருந்த கிளம்ப ஆயத்தமான இருவரையும் புகைப்பட கலைஞர்கள் துரத்தியதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக இளவரசர் ஹேரி மற்றும் மேகன் தம்பதி காரை நிறுத்தாமல் அங்கிருந்து கிளம்பி சென்றனர். இவர்களுடன் மேகனின் தாயாரும் பயணம் செய்திருக்கிறார். சுமார் இரண்டு மணி நேரம் கார் சேசிங் நடைபெற்றதாக இளவரசர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட தகவல்களில் அரை பல கார்கள் சேசிங்கில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதியில் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி பெரும் விபத்து ஏற்படும் சூழல் உருவானது. எனினும், ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதேபோன்று 1997ஆம் ஆண்டு புகைப்பட கலைஞர்கள் படம் எடுப்பதற்காக வாகனத்தை துரத்திய போது ஏற்பட்ட விபத்தில் ஹேரியின் தாயார் இளவரசி டயானா பலியானது குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles