NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கால்நடை மருத்துவர்களை தேவையான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்ய ஆலோசனை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கால்நடை மருத்துவர்களின் சேவைகள் தேவைப்படும் பகுதிகளுக்கு மாத்திரம் ஒதுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கால்நடை வைத்தியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்மாகாணத்தின் சில பிரதேசங்களுக்கு கால்நடை வைத்தியர்களின் சேவை தேவையில்லை எனவும், அவ்வாறான பிரதேசங்களில் உள்ள கால்நடை வைத்தியர்களை தேவையான பகுதிகளுக்கு அனுப்பி வைத்து அவர்களின் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சங்கம் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளது.

Share:

Related Articles