NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கிளிநொச்சியில் வாகன விபத்து – ஒருவர் பலி: 8 பேர் படுகாயம்

யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச பஸ் ஒன்றுடன், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி எதிரே பயணித்த வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்

கிளிநொச்சி – உமையாள்புரம் பகுதியில்  இன்று (24) அதிகாலை 4.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த பஸ், விதியில் இருந்த மாடுகளுடன் மோதிய பின் வேனுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் வவுனியாவை சேர்ந்த 50 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்தவர்களில் ஐவர் கிளிநொச்சி வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, குறித்த விபத்தில் 8 மாடுகளும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles