NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

வறட்சியான காலநிலை காரணமாக குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

வறண்ட காலநிலையுடன் நீர் ஆதாரங்களில் நீரின் அளவு படிப்படியாக குறைவடைந்து வருவதால் குடிநீர் விநியோகத்தில் பிரச்சினை ஏற்படாது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மேலதிக பொது முகாமையாளர் லசந்த வீரசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கீழ் ஏறக்குறைய மூன்று மில்லியன் நீர் பாவனையாளர்கள் இருப்பதாகவும், இவர்களில் வீட்டு நீர் பாவனையாளர்களின் எண்ணிக்கை சுமார் 22 இலட்சம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆகையால் குடிநீரை வறட்சியான இந்த காலக்கட்டத்தில் சிக்கனமாக பயன்படுத்துமாறு அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Share:

Related Articles