NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குப்பைகளை அகற்றும் தூய்மைப் பணியாளர் வேலைக்கு விண்ணப்பித்த பட்டதாரிகள்..!

ஹரியானா மாநிலத்தில் அரச அலுவலகங்களில் குப்பைகளை அகற்றும் தூய்மைப் பணியாளர் வேலைக்கு 1.2 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி 6,000ற்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரிகளும், 40,000 இளங்கலை பட்டதாரிகளும் இதற்கு விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.மேலும், வேலைவாய்ப்பின்மை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிகரிக்கும் வேலையின்மையை ஆளும் கட்சி கண்டுகொள்ளாமல் இருப்பதாகக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் வெளியிட்டுள்ளன.

Share:

Related Articles