இந்தியா, கேரளாவில் மூளையை உண்ணும் பக்டீரியாவான அமீபா காய்ச்சல் மிகவும் வேகமாக பரவி வருகிறது.இந்நிலையில், திருவனந்தபுரத்தில் மேலும் 4 பேருக்கு அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கேரளா அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 23ஆம் திகதி திருவனந்தபுரம் கன்னரவிளையைச் சேர்ந்த நபரொருவர் அமீபா மூளைக் காய்ச்சலினால் உயிரிழந்தார். மேலும் அவரது நண்பர்கள் நான்கு பேருக்கும் மூளைக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு நடத்தப்பட்ட முதற்கட்ட பரிசோதனையில், நால்வருக்கும் அமீபா மூளைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், நான்கு பேருக்கும் தீவிரமான சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.பாசிகள் வளர்ந்துள்ள நீர்நிலைகள், தேங்கி நிற்கும் நீர்நிலைகள் ஆகியவற்றில் குளிக்கும்போது அந் நீரிலிருக்கும் அமீபா மூக்கினூடாக மனிதனின் உடலுக்குள் சென்று மூளையைத் தாக்குகின்றன.
எனவே இதுபோன்ற நீர் நிலைகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.