இரத்மலானை விமானப்படை மைதானத்தில் கல்கிஸ்ஸ தொழில்நுட்ப கல்லூரிக்கும் புனித தோமஸ் கல்லூரிக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பாடசாலை லீக் றக்பி போட்டியின் போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கல்கிஸ்ஸ தொழில்நுட்ப கல்லூரி அணியை புனித தோமஸ் கல்லூரி அணி தோற்கடித்தது.
இதனையடுத்து சில தொழில்நுட்ப கல்லூரி பார்வையாளர்கள் மைதானத்தில் புகுந்து நடுவர்களை தாக்கியமையே பதற்றத்திற்கு காரணமாகும்.
நடுவர்களுடன் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதால், காயமடைந்த நடுவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் இந்தப் போட்டியில் புனித தோமஸ் கல்லூரி 30-26 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.