NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சீனாவில் போலி சமூக வலைத்தளங்கள் முடக்கம்!

சீனாவில் சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகளை பரப்புதல், பணமோசடி உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாக பல்வேறு முறைபாடுகள் அரசாங்கத்திற்கு கிடைத்தமையினால் கடந்த மார்ச் மாதம் முதல் சிறப்பு சோதனையை சீன அரசாங்கம் மேற்கொண்டது.

இதில் சீனா, வெய்போ, வீசாட் உள்ளிட்ட முக்கிய சமூக வலைதளங்களில் 10 இலட்சத்துக்கும் அதிகமான போலி கணக்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த 2 மாதங்களில் தவறான பதிவுகளை பதிவிட்ட சுமார் 66,000 போலி சமூக வலைதள கணக்குகளை மூடி உள்ளதாக அந் நாட்டின் இணையதள விவகார ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது .

மேலும் Tiktok செயலியின் பதிப்பான Tuni இல் சுமார் 9 இலட்சம் கணக்குகள் தவறான தகவல்களை பதிவிட்டதற்காக தண்டிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share:

Related Articles