மீண்டும் சீனாவில் அறியப்படாத நிமோனியா பிறழ்வு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த நோய்த்தொற்றை கண்காணிப்பதற்கான, கண்காணிப்பு அமைப்பைத் தயாரித்து வருவதாக சீனாவின் நோய்கள் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நோய்த் தாக்கம், குளிர்காலத்தில் சில சுவாச நோய்களை ஏற்படுத்தக்கூடியது எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பரவிய COVID -19 எனப்படும் அறியப்படாத நோய்க்கிருமிகளைக் கையாளுவதற்கான நெறிமுறைகளை அமைப்பதற்கு போதிய திறன்கள் இருக்காத நிலையில், தற்பொழுது கண்டறியப்பட்டுள்ள நிமோனியா வைரஸை கட்டுப்படுத்த போதிய அளவிலான தயார்நிலைகளை மேற்கொண்டுவருவதாக சீனாவின் நோய்க் கட்டுப்பாட்டு ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.