NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சூடானில் தொடர் உள்நாட்டு போர் – ஐ.நா. எச்சரிக்கை !

சூடானில் இடம்பெற்று வரும் போர் மற்றும் மக்களின் பசிக்கொடுமை ஆகியவை நாட்டையே அழித்துவிடும் என ஐ.நா. சபை எச்சரித்துள்ளது. 

ஐ.நா.சபையின் மனிதாபிமான விவகாரங்கள் மற்றும் அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் கிரிபித்ஸ் தெரிவிக்கையில்,

சூடான் உள்நாட்டுப் போர், மனிதாபிமான அவசரநிலையை தூண்டுகிறது. தீவிரமான மோதல், பசி, நோய் மற்றும் மக்கள் இடப்பெயர்ச்சி ஆகியவை முழு நாட்டையும் விழுங்கிவிடும் அபாயம் உள்ளது. சில இடங்களில் ஏற்கனவே உணவு தீர்ந்து விட்டது.பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் பலர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது என தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles