NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து இடையே கடும் போட்டி !

13வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஒக்டோபர் 5ஆம் ததிகதி முதல் நவம்பர் 19 ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது.


இதில் 10 நாடுகள் பங்கேற்கவுள்ளதுடன் போட்டியை நடத்தும் இந்தியாஇ நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நேரடியாக விளையாடுகின்றன.

எஞ்சிய 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. 10 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த தகுதி சுற்றில் தற்போது ‘சூப்பர் சிக்ஸ்’ போட்டிகள் நடைபெற்று வருகிறது.

2 முறை உலக கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்காட்லாந்திடம் தோற்றதால் உலக கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை முதல்முறையாக இழந்தது.

நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. உலக கோப்பை போட்டிக்கு 2ஆவதாக தகுதி பெறும் அணி எது என்பர் குறித்து அனைவரிடத்திலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


சூப்பர் சிக்ஸ் சுற்றில் இலங்கை 8 புள்ளியுடனும், ஜிம்பாப்வே 6 புள்ளியுடனும், ஸ்காட்லாந்து 4 புள்ளியுடனும், நெதர்லாந்து 2 புள்ளியுடனும் உள்ளன. வெஸ்ட் இண்டீஸ், ஓமன் அணிகள் இன்னும் புள்ளி எதுவும் பெறவில்லை.


ஜிம்பாப்வே-ஸ்காட்லாந்து இடையே நாளை நடைபெறும் போட்டி முக்கியமானது. இதில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றால் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles