(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இன்று முதல் மேல் மாகாண பாடசாலை மாணவர்கள் சீருடையின் கீழ் வெளிர் நிற நீளமான ஆடையை அணிய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு மற்றும் கொரோனாவை கட்டுப்படுத்த நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டெங்கு நோயிலிருந்து சிறுவர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண பிரதம செயலாளர் பிரதீப் யசரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டின் ஏனைய மாகாணங்களிலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 22,881 ஆக பதிவாகியுள்ளது.
மேல்மாகாணத்திற்கு அடுத்தபடியாக கண்டி, குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களிலேயே அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பட்டுள்ளது.