(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவிக்கு தசுன் ஷானக்கவை அழைக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கணிப்பு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேற்றைய தினம் இந்திய அணியிடம் ஏற்பட்ட கடும் தோல்விக்குப் பிறகு சில நிமிடங்களில் இந்தக் குறிப்புகள் பதிவிடும் பணி தொடங்கப்பட்டது.
தசுன் ஷானக்க சற்று பின்தங்கியிருந்தாலும் வெற்றிகரமான மற்றும் அதிர்ஷ்டமான தலைவர் என்பது அப்பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதனால் இலங்கை கிரிக்கெட் அணியை மீண்டும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என வர்ணனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உலகக் கோப்பையின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் போட்டியில் இருந்து விலகினார்.
இருப்பினும், உலகக் கோப்பையில் ஒரு வீரராக அவர் பரிதாபமாக தோல்வியடைந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.