எதிர்வரும் உலகக் கிண்ணத் தொடரில் இலங்கையானது சர்வதேச நகைச்சுவையாக மாறுவதற்கு முன்னர், தசுன் ஷானக்க அணித்தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டிய நேரம் இது என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.
ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் நேற்றைய தோல்வியின் பின்னர், இவ்விடயம் தொடர்பில் நீண்ட அறிக்கை ஒன்றை முன்வைக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில காரணங்களால், மேகமூட்டமான வானிலையில் இறுதிப் போட்டியின் நடுப்பகுதியில் துடுப்பெடுத்தாட தசுன் ஷானக்க முடிவு செய்ததாகவும், இதன் விளைவாக அனைத்து வீரர்களும் 50 ரன்களுக்குள் ஆட்டமிழந்ததாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தசுன் ஷானக்க கடந்த பல மாதங்களாக துடுப்பாட்டத்தில் மிகவும் தோல்வியடைந்து வருவதாகவும், கடந்த காலப்பகுதியில் அவர் ஐந்துக்கும் குறைவான வலது கை வீரர்களின் சராசரியைக் கொண்டிருந்தார் என்றும், இது இலங்கையின் 10ஆவது துடுப்பாட்ட வீரர் மகேஷ் தீக்ஷனவை விடவும் குறைவானது என்றும் கூறப்படுகிறது.
துடுப்பாட்டத்தை விட தனது தலைமைத்துவம் தான் முக்கியம் என போட்டிக்கு முன்னர் செய்தியாளர் சந்திப்பில் தசுன் ஷானக்க கூறியதாகவும், அதன் மூலம் தான் தனது அணியில் ஒரு பயணி என்பதை ஏற்று கொண்ட ஒரே வீரராக அவர் தான் இருக்க முடியும் எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.
தசுன் ஷானக்க ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பிலும் தெரிவுக்குழுவுக்கும், இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கும் நன்றி தெரிவிப்பதை அவதானிக்கின்றதாகவும் அதுவே அவரை அணியில் தொடர்ந்து வைத்திருக்க காரணமாக இருக்கலாம் எனவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.