NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தபால் திணைக்களத்தின் பணிகள் இறுதிக் கட்டடத்தை எட்டியுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் தெரிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தல் தபால்; மூல வாக்களிப்பு தொடர்பான தபால் திணைக்களத்தின் பணிகள் இறுதிக் கட்டடத்தை அடைந்துள்ளதாகப் பிரதி தபால் மா அதிபர் ராஜித கே. ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, சுமார் 7 இலட்சத்துக்கு அதிகமான செலுத்தப்பட்ட தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய பாதுகாப்பு பொதிகள் தற்போது கிடைத்துளளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விநியோகிக்கப்பட்ட வாக்குச்சீட்டு மற்றும் செலுத்தப்பட்டு மீளக் கிடைக்கப்பெற்ற வாக்குச்சீட்டு ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், 98 சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செலுத்தப்பட்ட தபால் மூல வாக்குச்சீட்டுக்களை உரிய மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அலுவலர்களிடம் ஒப்படைப்பதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தற்போது 85 சதவீதமான தபால் மூல வாக்குச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், கிடைக்கப்பெற்ற ஏனைய தபால் மூல வாக்குச்சீட்டுக்களை தெரிவத்தாட்சி அலுவலர்களிடம் ஒப்படைக்கும் பணிகள் இந்த வாரத்தினுள் நிறைவுசெய்யப்படும் எனவும் பிரதி தபால் மா அதிபர் ராஜித கே. ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles