NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் வில்லியம்சன்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பெப்ரவரி மாதம் நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

இந்த தொடரில் தொடைக் காயத்திலிருந்து மீண்டும் வரும் நியூஸிலாந்தின் முன்னணி நட்சத்திரம் கேன் வில்லியம்சன் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து திங்கட்கிழமை (22) நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறுகையில்,

  • பெப்ரவரி 4 ஆம் திகதி தொடங்கும் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக வில்லியம்சன் முழு உடற்தகுதியை மீண்டும் பெறுவார் என்று எதிர்பார்க்கின்றோம்.
  • வில்லியம்சனின் தொடை தசையில் சிறிய பிரச்சினை உள்ளது.
  • முன்னெச்சரிக்கையாக பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி 3 டி20 போட்டிகளில் இருந்து அவர் நீக்கப்பட்டார் – என்றார்.

கேன் வில்லியம்சன் டெஸ்ட் வடிவத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அண்மையில் தனது 29 ஆவது டெஸ்ட் சதம் மூலம் விராட் கோலியை சமன் செய்தார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து அணிக்கு வில்லியம்சன் முக்கியமானவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பங்களாதேஷில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நியூசிலாந்து தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles